Tuesday, May 02, 2006

ஏன் குளிர்கண்ணாடி அணியவேண்டும்?

ஏன் குளிர்கண்ணாடி அணிய வேண்டும் - ஐந்து காரணங்கள்

1. நல்ல தரமான குளிர்கண்ணாடிகள் உங்கள் கண்களை சூரியனிடமிருந்து வெளிப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களிடமிருந்து நூறு சதவீதம் பாதுகாக்கின்றன. கண்களை மட்டுமன்றி மிகவும் மென்மையான எளிதில் பாதிக்கப்படும் கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளையும் இவை காக்கின்றன அதன் மூலம் சுருக்கம் விழுதல், இளம் வயதிலேயே முதுமைத் தோன்றத்தைப் பெறுதல் போன்வற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்.

2.குளிர்கண்ணாடிகள் ஒளிச்சிதரலை குறைக்கின்றன. அனைத்துத் தளங்களும் ஒளியைச் சிதரடிக்கவல்லவை. பொதுவாக தண்ணீர், வாகனங்களின் கண்ணாடிகள் போன்றவை ஒளியைச் சிதரடித்து அவைகளை பல பக்கங்களிலும் பிரதிபலிக்கவல்லவை. இவை மிகவும் ஆபத்தானவை இத்தகைய ஒளிச்சிதரல்களின் பாதிப்பிலிருந்து நமது கண்களை குளிர்கண்ணாடிகள் காக்கின்றன. போலரைஷ்டு பூச்சுக்கொண்ட கண்ணாடிகள் இவ்வாறான ஒளிச்சித்ரல் பிரதிபலிப்பை முற்றிலுமாக குறைத்து நமது பார்வைக்கு ஒரு இனிமையான அனுபவத்தை தருகின்றன.

3.குளிர் கண்ணாடிகள் நமது கண்களை கொடுங்காற்று, தூசிகள், உடைந்து தெரித்து விழும் ஆபத்தான சிதரல்கள் போன்றவற்றிலிருந்தும் காக்கின்றன. கண்களை முழுமையாக மறைக்கக்கூடிய விதத்தில் தயாரிக்கப்படுகின்ற, விளையாட்டில் பயன்படுகின்ற குளிர்கண்ணாடிகள் இவ்வகையில் மிகச் சிறந்தவை.

4.அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை நமது கண்ணின் ஒளித்திரையினால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே நமது கண்ணின் மணிகள் சுருங்கி விரிந்து உள்செல்லும் ஒளியின் அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ கொடுக்கின்றன. இருளில் அதிகம் விரிந்தும், நல்ல ஒளியில் சுருங்கியும் ஒளியை உள்வாங்குகிறது. அப்படிச் சுருங்கியும் அதிகமான ஒளி உள்செல்லும் நேரத்தில் நமது கண்ணிமைகளும் சுருங்கி மேற்கொண்டு ஒளியைக் குறைத்து உள்செலுத்த உதவுகின்றன. இவ்வாறு நாம் அதிகமாக கண்களுக்கு அழுத்தம் கொடுத்து பார்க்க நேரிடுவதால் நமக்கு தலைவலி மற்றும் கண்களில் வலி மற்றும் சோர்வு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் போதுமான அளவுக்கு ஒளி வடிகட்டப்பட்டு உட்செலுத்தப்படுவதால் கண்களில் நாம் அழுத்தம் கொடுக்கவோ சுருக்கவோ தேவையில்லை. எனவே பார்வை சாதாரணமானதாகவும், கண்களுக்கு இதம் கொடுப்பதாகவும் இருக்கும்.

5. தெளிவான பார்வைக்கு குளிர்கண்ணாடிகள் பெரிதும் உதவுகின்றன. அதிகமான ஒளி எந்த அளவுக்குக் கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கின்றனவோ அதுபோலவே குறைவான ஒளியும். குளிர்கண்ணாடிகள் சரியாண அளவில் ஒளியை வடிகட்டி அணுப்புவதால் தெளிவான பார்வை நமக்கு கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு கண் பாதிப்புகள் வராமல் காக்கப்படும். கோடைகாலங்களில் வாகனங்களை ஓட்டுபவர் மற்றும் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக குளிர்கண்ணாடிகள் அணிவதன் மூலம் அதிவிரைவான கண்பாதிப்புகளைத் தவிர்த்து நல்ல தெளிந்த பார்வையோடு வாழலாம்.

3 Comments:

Blogger Unknown said...

பயனுள்ள பதிவு. முக்கியமாக தலைவலியால் அவதிப்பட்ட எனக்குத்தான் தெரியும் அதன் அருமை. குளிர் கண்ணாடி வாங்கும் போது, அந்தந்த நாட்டில் பயன்படுத்த அந்தந்த நாட்டில் தயாரித்த கண்ணாடியையே பயன் படுத்த வேண்டும். இங்கிலாந்தில் தயாரித்த கண்ணாடியை இந்தியாவில் பயன்படுத்தினால் அவ்வளவாக பயன் இருக்காது.

உங்கள் புகைப்படத்தைப் பார்த்து யாராவது கேள்வி ஏதும் கேட்ட்டார்களா என்ன? ;) ஏதோ விளக்கம் சொல்கிற மாதிரி இருக்கிறது.

மற்றுமொரு உபயோகம் - மனைவியுடன் செல்லும் போது, நாம் யாரையெல்லாம் பார்க்கிறோம் எனத் தெரியாமல் இருக்கவும் இது பயன்படும்! :))

5/03/2006 1:55 AM  
Blogger Prasanna said...

இப்பொ தான் உங்க ஃபோட்டோ அர்த்தம் புரியுது.. மீண்டும் ஒரு நல்ல பதிவு.. உபயோகமான பதிவு என சொல்லலாம். நான் எங்க அப்பாகிட்ட கூலர்ஸ் கேக்க ஆதாரமா உங்க பதிவைத் தான் காட்ட போறேன்..
முந்தைய பதிவில் என் பின்னூட்டங்களை வெளியிட்டதற்கும், என் சந்தேகங்களை தீர்த்து வைத்ததற்கும், என்னை சகித்து கொண்டதற்கும் நன்றி.

5/03/2006 3:09 AM  
Blogger Chellamuthu Kuppusamy said...

பயனுள்ள தகவல் - குறிப்பாக எனக்கு. மிக்க நன்றி.

-குப்புசாமி செல்லமுத்து

5/17/2006 3:49 AM  

Post a Comment

<< Home